#ElectionBreaking: இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!

The party leader Vijayakanth has released the list of the second phase candidates of dmdk who will contest in the Puducherry Assembly.

புதுச்சேரி சட்டப்பேரவையில் போட்டியிடும் தேமுதிகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக -காங்கிரஸ், என்.ஆர் காங்கிரஸ் -அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உள்ளது. இந்து தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று முன்தினம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருந்தார்.

அதன்படி, பாகூர் எஸ்எஸ்பி வேலு, காலாப்பட்டு எஸ் ஹரிஹரன், உப்பளம் வி சசிகுமார், நெடுங்காடு ஏ ஞானசேகர், திருநள்ளார் கே ஜிந்தாகுரு ஆகிய ஐந்து பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரியில் போட்டியிடும் தேமுதிகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ளார். அதில், மண்ணாடிபட்டு எஸ் மணிகண்டன், திருபுவனை டி விநாயகமூர்த்தி, மங்களம் ச பச்சையப்பன், வில்லியனுர் ஏ பாசில், உழவர்கரை ஜி ழில்பேர், கதிர்காமம் மோட்சராஜன், காமராஜர் நகர் நா நடராஜன் போட்டியிடுகிறார்.

மேலும் முத்தியால்பேட்டை ஏ அருணகிரி, உருளையன்பேட்டை ஆர் கதிரேசன், நெல்லித்தோப்பு ஏ பூவராகவன், அரியாங்குப்பம் ஏ லூர்துசாமி, மண்வெளி வீ திருநாவுக்கரசு, நெட்டப்பாக்கம் கே முருகவேல், காரைக்கால் வடக்கு ஏ வேலுசாமி, காரைக்கால் தெற்கு ஆர் ஜெகதீசன், நிரவி திருப்பட்டினம் ஆ அருள்ராஜ் ஆகியோர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node