வேட்புமனுவில் குஷ்பூ குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகை குஷ்பூ பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அங்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், வேட்புமனுவில் குஷ்பூ குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி,
கையிருப்பு – ரூ.2,15,600
அசையும் சொத்து – ரூ.4,55,45,693
அசையா சொத்து – ரூ.17,99,87,500
கடன்கள் – ரூ. 3,45,13,950
கடந்த ஆண்டு வருமானம் – ரூ.46,24,630
தங்கம் – 8.55 கிலோ
வெள்ளி – 78 கிலோ
உள்ளதாக நடிகை குஷ்பூ தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.