#ElectionBreaking: சீட்டு மறுப்பு., சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சுயேட்சையாக வேட்புமனு.!

AIADMK MLA from Chennamangalam has filed her candidature to contest the upcoming assembly elections as an independent.

வரும் சட்டப்பேரவை தேர்தலில் சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

சேந்தமங்கலம் தொகுதியில் சீட்டு கிடைக்காததால் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரன் சுயேட்சையாக போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரன் போட்டியிடும் சூழலில் தற்போதைய எம்எல்ஏவுக்கு சீட்டு மறுக்கப்பட்டிருந்தது.

கொல்லிமலை பகுதியை உள்ளடக்கிய சேந்தமங்கலம், தமிழகத்தின் 2 பழங்குடியின தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் தற்போது அதிமுக எம்எல்ஏவாக இருக்கும் சந்திரசேகரனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாத சூழலில், அவர் தற்போது சுயேட்சையாக போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.