இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் செல்ல

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக தகவல்.

சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன்  தலைமையில்,செயற்குழு கூட்டம் நடைபெற்றது.அதில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்று மாலை 5 மணிக்கு ஜெயலலிதா நினைவிடம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.