திமுக தலைவர் ஸ்டாலின் கனவு முதலமைச்சர் – முதல்வர் பழனிசாமி பேச்சு

Dravida Munnetra Kazhagam leader Stalin's dream Chief Minister - Chief Minister Edappadi Palanisamy speech

மக்கள் கிராமசபை என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் குறித்து ‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் அதிமுக சார்பில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.கோவை மாவட்டம்  செல்வபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில் ,

மக்கள் கிராமசபை என்ற பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுகிறார். அதிமுகவை பொருத்தவரை மக்கள் தான் முதலமைச்சர்.மேலும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.ஸ்டாலின் கனவு முதலமைச்சர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய அளவில் தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது.தமிழகத்தில் ஜாதி  மதச்சண்டை இல்லை என்று பேசியுள்ளார்.

இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் கோவை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.