ஒரே ஆண்டில் ஆவின் பொருள்களின் விலையை 3 முறை உயர்த்தியபின், ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக தமிழக முதலவர் பாராட்டியுள்ளார் என அண்ணாமலை ட்விட்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக கூறியதை விமர்சித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘ஒரே ஆண்டில் ஆவின் பொருள்களின் விலையை 3 முறை உயர்த்தியபின், ஆவின் வருவாய் உயர்ந்துள்ளதாக தமிழக முதலவர் பாராட்டியுள்ளார்.ஆவின் நெய்யின் விலை மட்டும் கடந்த 9 மாதங்களில் 22% உயர்ந்துள்ளது. அடுத்து என்ன, மின்வாரியத்தின் வருவாய் உயர்ந்ததற்கு சாராய அமைச்சரை பாராட்டவுள்ளீரா?’ என பதிவிட்டுள்ளார்.
unknown node