ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது திமுக செயல்திட்டக்குழு கூட்டம் !

With next year's assembly elections in Tamil Nadu looming, the DMK High Level Working Group meeting has begun.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.

இதனிடையே இன்று   திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் தொடங்கியுள்ளது.சென்னை – அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,நடைபெறும்  உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.