உள்ளாட்சித் தேர்தலில் திமுக 100% வெற்றி பெறும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramaniam has stated that local government elections will be held in Tamil Nadu soon.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசிகளை வீணாக்கியதில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது என்றும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர வாய்ப்புள்ளது, தேர்தலில் திமுக 100% வெற்றிபெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.