சென்னை : தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி குரங்கம்மை தொற்று நோயின் பாதிப்பையொட்டி உலக சுகாதார மையம் (WHO) கடந்த 14-ம் தேதி அவசர நிலையை அறிவித்திருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவ தொடங்கிய இந்த நோயானது இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் படிப்படியாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுவரை, குரங்கம்மை தொற்று நோயால் 15,000 மேற்பட்டோர் […]
சென்னை எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு நேற்று நள்ளிரவு கசிவு ஏற்பட்டது. இதனால் மக்கள் மூச்சிதிணறல் ஏற்பட்டு அவதியில் இருக்கிறார்கள். இந்த அமோனியா வாயு கசிவு ஏற்பட முக்கிய காரணமே கடலுக்கு அடியில் இருந்து தொழிற்சாலைக்கு வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு தான் என தெரியவந்துள்ளது. எண்ணூர் கடல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோரமண்டல் தொழிற்சாலையின் திரவ அமோனியம் எடுத்து வரும் குழாயிலிருந்து அமோனியா வாயு […]
வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு […]
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹைனா (கழுதைப்புலி) சண்டை காட்சி தான் கூஸ்பம்ஸ் ஆக இருந்தது. படத்தின் முதல் கட்சியாக காட்டில் இருந்து வழித்தவறி ஊருக்குள் நுழையும் ஹைனாயிடம் சண்டையிட்டு ஒரு வழியாக அதை மயக்கமடைய செய்து பிடித்துவிடுவார்கள். பின்னர், அதனுடன் பழகி தன்னுடன் வீட்டிற்கு எடுத்து செல்வார். படத்தில் அந்த ஹெய்னாவுக்கு விஜய் ‘சுப்ரமணி’ என்று […]
வரும் நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை அன்று பெரும்பாலான மக்கள் குறிப்பாக குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழ்வர். இந்த பட்டாசு வெடிக்கும் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. ஏற்கனவே, பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சீன பட்டாசுகளை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீபாவளி தினத்தன்று அரசு முன்னெடுத்துள்ள முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]
நவம்பர் 4ம் தேதி 37 மாவட்டங்களில் ஹெல்த்வாக் சிஸ்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நவ.4 அன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் 37 மாவட்டங்களிலும் தொடங்கப்படவிருக்கின்ற “நடப்போம், நலம் பெறுவோம்” HEALTH WALK 8 KM நடைபாதையில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், நவம்பர் 4ம் தேதி 37 மாவட்டங்களில் ஹத்வாக் சிஸ்டம் தொடங்கப்பட உள்ளது. மாதந்தோறும் முதல் […]
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இந்த ஹாக்குதலில் இஸ்ரேல் – பாலஸ்தீன மக்கள் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். தாயகம் திரும்பிய […]
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று “பல்கலைக்கழக ஆராய்ச்சி நாள் 2023” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். இந்த விழாவில் மருத்துவ மாணவர்கள், மருத்துவப் பேராசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அதேபோல் 50 கட்டுரைகள் கொண்ட “அறிவேள்வி” எனும் நூலையும் அமைச்சர் வெளியிட்டார். இந்த விழாவில் அமைச்சர் பேசுகையில், தமிழ்நாட்டில் சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி கருத்தரங்கம் நடைபெற உள்ளது. 100 கோடி ரூபாய் செலவில் […]
ஹவுஸ் சர்ஜனுக்கான கட்டணம் ரூ.30,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்படவில்லை. கன்னியாகுமரியில் சிலருக்கு குரங்கு அம்மை அறிகுறி உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை. அரசுக்கு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. குரங்கம்மை நோய் குறித்து யூகங்களுக்கு […]
63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவ தொடங்கி உள்ளது என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) வேகமாக பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன் முறையாக கண்டறியப்பட்டது. உலகளவில் இதுவரை 57 நாடுகளில் பரவியுள்ள குரங்கு அம்மை நோய் 8,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், குரங்கு அம்மை நோய் இந்தியாவில் நுழையாமல் இருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் […]
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,நேற்று 476 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 221 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தது.ஆனால்,தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,தமிழகத்தில்தான் கொரோனா பரவல் குறைவாக பரவுகிறது எனவும் எனினும் பொதுமக்கள் அனைவரும் மிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,மகாராஷ்டிரா,கேரளா,டெல்லி ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை தேவை என மாவட்ட ஆட்சியாளர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து,தற்போது சென்னை,செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது எனவும்,இதனால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறி மாவட்ட நிர்வாகங்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் […]
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த ஆண்டு ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்புக்கான கால அளவவானது தேர்தல் அறிக்கையில் கூறியவாறு 1 வருடமாக உயர்த்தப்பட்டது.இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன்,பின் என பிரித்து அரசு ஊழியர்கள் எடுத்துக் கொள்ளவும்,விடுப்பு சமயத்தில் அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கவும் அனுமதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,அரசு ஊழியர்களுக்கு குழந்தை பிறந்தவுடன் இறந்தாலும்,குழந்தை பிறந்து சிறிது காலம் கழித்து இறந்து விட்டாலும் அவர்களுக்கும் 365 நாட்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என தமிழக அரசு […]
தமிழ்நாட்டில், முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா தொற்று பரவலை தடுக்க, பொதுமக்கள் முகக்கவசம் அணிவது அவசியம். தமிழ்நாட்டில், முகக்கவசம் அணிவது விலக்கிக் கொள்ளப்படவில்லை, அபராதம் மட்டும்தான் விலக்கு அளித்துள்ளோம். தேவைப்பட்டால் மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசியது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. டெல்லி, […]
தமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல். தமிழ்நாட்டில் மத்திய அரசின் சார்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சட்டமன்றத்தில் பேசிய அவர், தமிழகத்தில் புதிதாக 25 நகர்ப்புற சுகாதார மையங்களை அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. 30,000 மக்கள் தொகைக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க விதி உள்ளது. ஒரு ஆரம்ப […]
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்பூசிகளை வீணாக்கியதில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது என்றும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தடுப்பூசிகளை சிறந்த முறையில் பயன்படுத்தியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது எனவும் கூறினார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வர வாய்ப்புள்ளது, தேர்தலில் திமுக 100% வெற்றிபெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]
அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் முருகன் தடுப்பூசி பற்றாக்குறைக்குக் காரணம் குறித்துப் பேசும்போது எவ்வளவு போடப்பட்டுள்ளன, எவ்வளவு இருப்பு உள்ளது, மாவட்டங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டவை எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கை வேண்டும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செரியூட்டிகளை அமைச்சர் சுப்பிரமணியன் […]
நண்பகல் 12 மணிக்கு மேல் தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி இல்லை என்ற தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்புசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களும் தயாராக […]
கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெண்டர் எடுக்காததன் காரணமாக மீண்டும் உலகளாவிய டெண்டர் விடப்படும். தமிழகத்தில் 18 முதல் 44 வயதுவரை தடுப்பூசி செலுத்த போதிய அளவில் மருந்துகள் இல்லாத நிலையில் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் கடந்த மாதம் கோரப்பட்டது. 90 நாளில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என […]