நாளை  முதல் கிராம சபைக் கூட்டங்களை தொடங்குகிறது திமுக

The DMK plans to start about 16,000 Grama Niladhari meetings across Tamil Nadu from tomorrow to January 10.

தமிழகம் முழுவதும் நாளை  முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை தொடங்க திட்டமிட்டுள்ளது திமுக.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.எனவே 2021-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை  முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை சுமார் 16,000 கிராம சபைக் கூட்டங்களை திமுக   தொடங்குகிறது.கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சந்தித்துள்ள அவலங்கள் – சரிவுகள் – தோல்விகளை மக்களுக்கு நினைவூட்டும் வகையில்தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.