திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது.. 100 நாட்கள் வரை விமர்சனம் செய்யமாட்டேன் – எஸ்.வி.சேகர்

SV Sekar said the government led by Chief Minister MK Stalin was handling the corona well.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி. சேகர், திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் இருக்கிறோம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனா தொற்றுநோய் காலத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதுபோன்று சமயத்தில் மக்களை காப்பாற்றுவதில் மட்டும் தான் முழு கவனத்தை செலுத்த முடியும். எல்லா துறைகளிலும் 100% கவனத்தை செலுத்த முடியாது. ஒரு சமயத்தில், ஒரு வேலை மட்டும் தான் பார்க்க முடியும், அது யாராக இருந்தாலும் சரி.

அதையும் காலையில் எழுந்தவுடனேயே விமர்சித்து கொண்டியிருந்தால் வெற்று அரசியலாக தான் இருக்கும் என கூறியுள்ளார். ஒரு உன்னத நோக்கத்துடன் செயல்படும் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசை எப்படி விமர்சனம் செய்ய முடியும். தேவையில்லாமல் விமர்சனம் செய்வது வெற்று அரசியல் என்றும் தற்போது விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.