திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம்.!

It has been reported that the block allocation agreement between the DMK and the Marxist Communist Party will be signed tomorrow.

திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பெரும்பாலும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இன்னும் ஒருசில கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள முக ஸ்டாலின், கூட்டத்தை முடித்துவிட்டு இன்று இரவு சென்னை வருவதாகவும், நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.