13 மாணவர்கள் மரணத்திற்கு திமுக தான் காரணம் – முதலமைச்சர் பழனிசாமி

13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என்றும் பேசினார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என்றும் பேசினார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இன்று 2-வது நாளாக சட்டப் பேரவை தொடங்கியது. பேரவையில் ,நீட் தேர்வு மனஅழுத்தத்தால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது,தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம்  கொண்டு வந்தார் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் .  நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின்  கூறினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,நீட் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் ஆஜரானதா? இல்லையா?  என்று கேள்வி எழுப்பினார்.நீட் தேர்வு பிரச்சினைக்கு திமுக தான் காரணம்.காங்கிரஸ், திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.13 மாணவர்கள் மரணத்திற்கு திமுகவே காரணம் என்றும் பேசினார்.

13 மாணவர்கள் மரணத்திற்கு திமுக தான் காரணம் – முதலமைச்சர் பழனிசாமி