விக்கிரவாண்டி தொகுதியில் திமுக,நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி-மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி, விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அபார வெற்றிபெற்றார்.இதனால்  நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியிலிருந்து காங்கிரஸ் கட்சியின் ஹெச்.வசந்தகுமார் விலகினார்.சபாநாயகர் தனபாலிடம் தனது விலகல் கடிதத்தை அளித்தார்.

இதேபோல் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் எம்.எல்.ஏ ராதாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக ராதாமணி ஜூன் 14 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.எனவே நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகள் காலியாக இருந்தது.தற்போது தமிழக  சட்டப்பேரவை செயலர் விக்கிரவாண்டி தொகுதிகாலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இது குறித்து  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில்  காங்கிரஸ் போட்டியிடும் என்றும் தெரிவித்துள்ளார்.