#ELECTION BREAKING:திமுக – காங். இடையே இழுபறி... காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு..!

CK Kumaravel, general secretary of the Makkal Needhi Maiam, said it would be better if the Congress came to the People's Justice Center alliance.

மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் சி.கே குமரவேல்  தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ளதால் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு, கூட்டணி உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டு வருகிறது.

இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு சுலபமான முடிவு எட்டப்படவில்லை, தொடர்ந்து இழுபறியில் இருந்து வருகிறது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தால் நல்லது என மக்கள் நீதி மய்ய பொதுச்செயலாளர் சி.கே குமரவேல் கூறியுள்ளார்.

ஏற்கனவே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#ELECTION BREAKING:திமுக – காங். இடையே இழுபறி... காங்கிரசுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு..!