இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு? – இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.!

It has been reported that the DMK has offered to allot 6 constituencies to the Communist Party of India.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவுடன் மதியம் 12 மணிக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையெழுத்திட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, நேற்று திமுகவுடனான 2வது கட்ட பேச்சுவார்த்தைபின் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. நாளை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் எத்தனை தொகுதிகள் என்பதை அப்போது அறிவிப்போம் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு? – இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.!