தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்- சோனியா காந்தி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்தநாளை நாளை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது பிறந்தநாளை நாளை கொண்டாடுவதில்லை என்று முடிவு செய்துள்ளார்.

இன்று காலை குன்னூர் அருகே முப்படைகளின் தளபதி பிபின் ராவத் புறப்பட்டு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி என்ற பகுதி அருகில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் மனைவி  உட்பட 13 பேர்  உயிரிழந்தனர்.

இந்நிலையில்,  நாளை டிசம்பர் 9 ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்துள்ளார். மேலும் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எந்தவிதமான கொண்டாட்டங்களையும் கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

unknown node