டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு என இது போன்ற கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதாகக் கூறி […]
டெல்லி: மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 99 உறுப்பினர்களை பெற்று எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது. இப்படியான சூழலில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக (எதிர்க்கட்சி தலைவர்) யார் தேர்ந்தெடுக்க உள்ளனர் என்ற ஆலோசனை இன்று நடைபெற்றது. இன்று காலை காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், ராகுல் காந்தியை நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்க உறுப்பினர்கள் பரிந்துரை செய்தனர். அதனை தொடர்ந்து நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் தற்போது டெல்லி பழைய பாராளுமன்றத்தில் நடைபெற்றது. அதில், காங்கிரஸ் நாடாளுமன்றக் […]
I.N.D.I.A கூட்டணி: மக்களவை தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவி வருகிறது. பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி தலைவர்களும், காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி தலைவர்களும் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில், முதலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆலோசனை கூட்டம், டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் நடைபெற்றது. அதில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகிய பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சியினரின் […]
காங்கிரஸ்: மக்களவை தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் இந்தியா முழுக்க உள்ள தொகுதிகளில் இருந்து வெளியாகி வருகின்றன. இதில் NDA கூட்டணி 293 தொகுதிகளிலும், I.N.D.I.A கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய பிரதான காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். அப்போது பேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி மிகவும் மோசமான […]
டெல்லி: நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் நடைபெற்று முடிந்துள்ளது. நாளை ஒரே கட்டமாக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நேற்று முன்தினம் (ஜூன் 1) வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்ற உடன், மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. அதில் பெரும்பாலும் ஆளும் பாஜக கட்சி தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என குறிப்பிடபட்டுள்ளது. இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த […]
டெல்லி: இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா (I.N.D.I.A) கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் என பல்வேறு கட்சி தலைவர்கள்/பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், பக்வந்த் மன், சரத் பவார், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் , […]
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர்வர்கள் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னை அருகே படுகொலை செய்யப்பட்ட கறுப்பு தினம் இன்று. இந்திரா மற்றும் பெரோஸ் காந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி, 1984 ஆம் ஆண்டு தனது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸின் பொறுப்பை ஏற்றார். 1991ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக […]
PM Modi: அரசியலுக்கு அப்பாற்பட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு உதயவியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பரப்புரையில் பாஜகவும், காங்கிரஸும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேபோல் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதனால் தேர்தல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தனது அரசியல் எதிரிகளான காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் […]
Prashant Kishor: ராகுல் காந்தி பிடிவாதமாக இருப்பதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கருத்து. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதல்கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து மாநில கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தொடர் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், […]
250 உறுப்பினர்களைக் கொண்ட ராஜ்யசபாவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். இந்த ஆறு ஆண்டுகள் முடிந்து தற்போது 56 மாநிலங்களவை (ராஜ்ய சபை) எம்பி இடங்கள் காலியாக உள்ளன. இந்த ராஜ்ய சபா எம்பிக்களை மாநில எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பர். ஆளும் கட்சிக்கு அதிக மாநிலங்களவை உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு குறைவான ராஜ்யசபா உறுப்பினர்களும், மற்ற கட்சிகளுக்கு அவர்களின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை வைத்து மாநில ராஜ்யசபா எம்பி சீட் நிர்ணயம் செய்யப்படும். ராமர் கோவில் திறப்புக்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்கு முன்பு நாடு முழுவதும் உத்தரப் பிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு பிப்.27ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் அண்மையில் அறிவித்திருந்தது. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 8ம் தேதி தொடங்கிய நிலையில், […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திறப்பு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர். […]
உத்திர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதியாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் (Pran Pratishtha) விழா வரும் ஜனவரி 22ஆம் தேதிநடைபெற உள்ளது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் நடிகர்கள் மாதுரி தீட்சித், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் பங்கேற்க உள்ளனர். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் : ரயில் […]
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. அதுவும் தெலுங்கானா தனி மாநிலமாக பிரிந்து கடந்த 10 வருடங்களாக ஆட்சி செய்து வந்த முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 64 தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்க […]
திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் […]
இந்தியா-சீனா மோதல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அனுமதி மறுக்கிறது. – சோனியா காந்தி குற்றசாட்டு. இந்தியா சீனா எல்லையான அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் அண்மையில் இந்திய ராணுவம் மற்றும் சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அத்துமீறிய சீன ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. இந்த எல்லை மோதல் குறித்து, மாநிலங்களவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த ஜெய்வீர் ஷெர்கில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகவும், செய்தி தொடர்பாளராகவும் பொறுப்பில் இருந்தவர் ஜெய்வீர் ஷெர்கில். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு அக்கட்சியை விட்டு வெளியேறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேற பாஜகவில் அண்மையில் ஜெய்வீர் ஷெர்கில் சேர்ந்தார். தற்போது அவருக்கு பாஜகவில் முக்கிய பொறுப்பாக தேசிய செய்தி தொடர்பாளர் எனும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜெய்வீர் ஷெர்கில், […]
மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்திய சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 14 ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது 134வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளான இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்போதைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே […]
மல்லிகார்ஜுனே கார்கே தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வலிமையடையும் என்று சோனியா காந்தி நம்பிக்கை. காங்கிரஸின் புதிய தலைவராக இன்று மல்லிகார்ஜுனே கார்கே பதவியேற்றுள்ளார். இது குறித்து முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதாவது, காங்கிரஸ் இதுவரை பல சவால்களை சந்தித்து வந்தது,ஆனால் தற்போது இருக்கும் ஒற்றுமை மற்றும் பலத்தால் அந்த சவால்களை காங்கிரஸ் முறியடித்துவிடும் என்று அவர் கூறியுள்ளார். மல்லிகார்ஜுனே கார்கே காங்கிரஸ் தலைவராக தேர்வானது குறித்து எனக்கு முழு திருப்தியாக இருக்கிறது, அவர் அனுபவம் […]
காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுனே கார்கே இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மல்லிகார்ஜுனே கார்கே, டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடத்தில் இன்று காங்கிரஸ் தலைவராக பதவியேற்றுக் கொண்டார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதரா மற்றும் மூத்த தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். அதற்கு முன்னதாக கார்கே, இன்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் தனது மரியாதையை செலுத்தினார். மேலும் 24 ஆண்டுகளில் காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வாவது இதுவே […]