நீதிமன்ற அவதூறு வழக்கு : உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஹெச்.ராஜா முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்!

Former BJP national secretary H Raja has filed a bail petition in the Madurai branch of the High Court alleging defamation of the court.

நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பொழுது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் தன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல் நிலையத்தில் நான் உட்பட பல நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது இந்த வழக்கிற்காக திருமயம் கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றப்பத்திரிகையில் நான் தலைமறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கூறப்பட்டுள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு கீழமை நீதிமன்றம் எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. எனவே இந்த வழக்கில் காவல்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றுகிறேன், எனவும் குறிப்பிட்டுள்ளார்.