ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்ததை தொடர்ந்து, நாளை ஒருநாள் நாடு முழுவதும் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போதே 41 வயது மதிக்கதக்க இருந்த ஒரு நபர் ஷின்சோ அபேவை சுட்டிவிட்டார்.
unknown nodeஅதன் பிறகு, உடனடியாக முதலுதவி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். ஒரு நாட்டின் முக்கிய அரசியல் தலைவர், முன்னாள் பிரதமர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த செய்தி உலகத்தையே அதிர வைத்தது என்று கூறும் அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
unknown nodeஏற்கனவே, நம் பிரதமர் நரேந்திர மோடி , ‘எனது நண்பர் சீக்கிரம் குணமடைய வேண்டுகிறேன்.’ என தனது டிவிட்டர் பக்கத்தில் ஷின்சோ அபே சிகிச்சையில் இருக்கும் போதே டிவீட் செய்து இருந்தார்.
தற்போது ஷின்சோ அபே உயிரிழந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, நாளை ஒருநாள் நாடு முழுவதும் துக்க அனுசரிப்பு அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
unknown node