#CoronaBreaking: தமிழகத்தில் 28,978 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை

In Tamil Nadu today alone, 28,978 people have been confirmed to have corona infection, according to the health department.

தமிழகத்தில் இன்று மட்டும் 28,978 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 28,978 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், இதுவரை மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,09,237 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 7,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 232 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 15,880 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று கொரோனாவில் இருந்து 20,904 பேர் மீண்ட நிலையில், இதுவரை 12,40,968 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் இன்று ஒரே நாளில் 1,46,233 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 2,41,54,820 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் 1,52,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node