18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி

Andhra Pradesh Chief Minister Jaganmohan Reddy has announced that the corona vaccine will be given free of cost to those above 18 years of age.

ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.

நாடு முழுவதும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி என மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகம், கேரளா, அசாம், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்திருந்தன.

அந்த வகையில், தற்போது ஆந்திர மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதனிடையே, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை அறிவித்திருந்தது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்து வருகின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் – முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி