கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம்!!

In India, 3,26,098 new coronas have been confirmed in the last 24 hours, according to the Ministry of Health.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை குறையவில்லை, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,26,098 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 லிருந்து 2,43,72,907 ஆக அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிப்பால் 3,890 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 2,66,207 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் 3,53,299 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,04,32,898 ஆக உள்ளது. தற்போது 36,73,802 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 18,04,57,579 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.