இந்தியாவில் ஒரே நாளில் 3,86,452 பேருக்கு கொரோனா பாதிப்பு... 3,498 பேர் உயிரிழப்பு!!

Corona has been confirmed for 3,86,452 people across the country in the last 24 hours, the Federal Ministry of Health announced.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,87,62,976 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,498 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவைர கொரோனாவால் இறந்தோரின் எண்ணிக்கை 2,04,832 லிருந்து 2,08,330 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,97,540 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், மொத்தம் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 1,50,86,878 லிருந்து 1,53,84,418 ஆக அதிகரித்துள்ளது என்பது மன உறுதியை அளிக்கிறது. தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,70,228 ஆக உள்ளது.

மேலும், இந்தியாவில் இதுவரை 15,22,45,179 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதர அமைச்சகம் தெரிவித்துள்ளது.