இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,43,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை மோசமாக தாக்கி வருகிறது. இது கொரோனா முதல் அலையை விட வேகமாக பரவி வருகிறது. அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும், பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 24 […]
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,06,65,148 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இந்தியாவில் ஒரே நாளில் 3,82,315 பேருக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 3.68 லட்சம், நேற்று 3.57 லட்சகமாக இருந்த பாதிப்பு இன்று 3.82 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு 2,02,82,833 லிருந்து 2,06,65,148 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, ஒரே நாளில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் 3,780 பேர் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2,02,82,833 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் கடந்த 24 மணி நேரத்தில் 3,449 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தம் பலி எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று ஒரே நாளில் […]
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதன் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டியிருக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,86,452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதனால் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 1,87,62,976 […]
கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவதற்காக 100 மில்லியன் டாலருக்கு அதிகமான மருத்துவ பொருட்களை அனுப்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவலால் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பாதிக்கப்படுகிறார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை அதிரிப்பதால் மருத்துவம் சார்ந்த ஆக்சிஜன், ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என பல்வேறு பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால், உலக நாடுகள் பல கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவுதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில், ஆரம்பத்தில் கொரோனாவால் கடுமையான இழப்பை சந்தித்த அமெரிக்காவுக்கு […]
கொரோனா பரவல் அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து தலைமை செயலாளர் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களின் கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா என்பது குறித்து ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், நெல்லை, கோவை, திருப்பூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரிப்பால் […]
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று முன் எப்போதும் இல்லாத அளவாக 3 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை முன்பைவிட, இந்த இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக கண்டறியப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒரே நாளில், கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய […]
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 11,30,167 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4,764 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதுபோல இன்று மேலும் 98 […]
இன்னும் சற்றுநேரத்தில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, இன்னும் சற்றுநேரத்தில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளது. இரண்டாவது அலை தீவிரம் காரணமாக நாடு […]
மக்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தை பாதுகாத்து நோய் வராமல் தடுக்க வேண்டிய காலகட்டம் இது என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள். இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் தங்கள் உடல்நலத்தை பாதுகாத்து நோய் வராமல் தடுக்க வேண்டிய காலம் இது. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும், தங்கள் உறவினர்களையும் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசுகள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக மக்கள் […]
கேரள மாநிலத்தில் ஒரே நாளில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் 24 மணி நேரத்தில் 32 பேர் உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 5170 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 2,47,181 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,41,199 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், மொத்தம் 1,53,54,299 மாதிரிகள் பரிசோதனை […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுடன் தைவான் துணை நிற்கிறது என்று அந்நாட்டு அதிபர் சாய் இங்-வென் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், தினந்தோறும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவர் மருந்து, படுக்கை வசதி என மருத்துவம் சார்ந்த உபகரணங்கள் தட்டுப்பாடு நிலவி வருவதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், கொரோனா 2வது […]
கொரோனா இரண்டாவது அலையில் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து அறிக்கை தர மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்சிஜன் விநியோகம், ரெம்டெசிவர் மருந்து கையிருப்பு, படுக்கை வசதி உள்ளிட்டவை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆக்சிஜன் உள்ளிட்ட கொரோனா விவகாரங்களை உயர்நீதிமன்றங்கள் விசாரிப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் தொடர்பான விவகாரங்களை உயர்நீதிமன்றம் விசாரிப்பதை தடுக்க விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், உயர்நீதிமன்றங்கள் விசாரித்தலும், நாங்களும் அமைதியாக […]
கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம். இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ரதீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா பரவல் உள்ளிட்ட விவகாரங்களை குறித்து, நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் முழு பொது முடக்கம் வருமா? அல்லது […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடியை சமாளிக்க கூகுள் நிறுவனம் நிதியுதவி வழங்குவதாக சிஇஓ, சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். Devastated to see the worsening Covid crisis in India. Google & Googlers are […]
வருகிற 26ம் தேதி முதல் கொரோனாவுக்கான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டவது அலை வேகமாக பரவி வருவதால் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. தொற்று பரவல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க இன்று உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். புதிய கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்பை இன்று […]
தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொரோனா 2.0 பாதுகாப்பாக இருப்போம் என்றும் பக்கபலமாக நிற்போம் எனவும் கூறி, முக ஸ்டாலின் திமுகவினருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கொரோனா இரண்டாவது அலை உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. அதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் வேகமாகவும், கோரமாகவும் இருக்கிறது. ஒரு நாளில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கடந்து நிற்கிறது. தமிழ்நாட்டில் […]
மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல என கமல்ஹாசன் ட்வீட். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். அதில், அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல என கட்டமாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, பூமியை மீட்போம் என்கிற கோஷத்தோடு […]