காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – மத்திய தேர்தல் குழுவுடன் ஆலோசனை.!

The Central Electoral Commission is meeting in Delhi shortly to finalize the Congress candidates.

காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் சற்று நேரத்தில் கூடுகிறது.

ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதான கட்சிகளான அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளும் தீவிரமாக தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடம் 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர், சோளிங்கர், ஊத்தங்கரை, ஓமலூர், உதகமண்டலம், கோவை தெற்கு, காரைக்குடி, மேலூர், சிவகாசி, திருவைகுண்டம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர், ஈரோடு கிழக்கு, தென்காசி, அறந்தாங்கி, விருதாச்சலம், நாங்குநேரி, கள்ளக்குறிச்சி, திருவில்லிபுத்தூர், திருவாடனை, உடுமலைப்பேட்டை, மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

இந்ந நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் சற்று நேரத்தில் கூடுகிறது. சென்னையில் இருந்து திக் விஜய் சிங், பிரான்சிஸ்கோ, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோர் காணொலி வாயிலாக இந்த கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர்களை இறுதி செய்கிறார்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் – மத்திய தேர்தல் குழுவுடன் ஆலோசனை.!