#BREAKING: 6 தொகுதியிலும் தனி சின்னத்தில் போட்டி.. திருமாவளவன் அறிவிப்பு ..!

Thirumavalavan has announced that all the 6 constituencies allotted to VCK will be contested under a separate symbol.

விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளும் தனி சின்னத்தில் போட்டியிடம் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனால், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக – 6, ஐ.யூ.எம்.எல்- 3, ம.ம.க – 2  தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளும் தனி சின்னத்தில் போட்டியிடம் என கூறினார்.

மேலும், சனாதனத்தில் இருந்து தமிழ்நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டிய நிலை தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது . எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாத நிலையில் இருந்த பாஜக சதி செய்து ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சதி செய்து பாஜக ஆட்சியை பிடித்தது.

தமிழகத்தில் ஜாதி மத சக்திகளை பாஜக வளர்கிறது. சமூக நீதியை அழித்து ஒழிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது என கூறினார்.