ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் – தமிழக அரசு உத்தரவு

The Tamil Nadu government has ordered all colleges and universities to conduct online classes only.

அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, நீண்ட மாதங்களுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகளை நடத்த வேண்டும் என்றும் தேர்வுகளையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் இன்று முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.