ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் பாதுகாப்பானது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

State BJP leader Annamalai has said that he is ready to explain the cinematography law to the Tamil film industry.

ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து தமிழ் திரையுலகினருக்கு விளக்கம் தர தயார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஏற்கெனவே இருந்து வரும் ஒளிப்பதிவு சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதற்கு திரை பிரபலங்கள் பலரும் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒளிப்பதிவு சட்டத் திருத்தம் திரைத்துறையினரின் உரிமைக்கு பதிகப்பானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் திரையுலகிற்கு எந்த ஒரு குறை என்றாலும் தமிழக பாஜக ஆதரவாக செயல்பட தயாராகவுள்ளது என்றும் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் குறித்து எந்தவித கருத்துக்களையும் பரிமாறிக்கொள்ள தயாராக இருக்கிறோம் எனவும் கூறியுள்ளார். ஒளிப்பதிவு திருத்தச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் திரைத்துறையின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.