ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!

Tamil Nadu Chief Minister MK Stalin meets Governor Banwarilal Purohit at Chennai Kindi Rajpavan.

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சந்திப்பு.

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பன்வாரிலாலை சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உள்ளனர்.தமிழக ஆளுநராக பணியாற்றியதற்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை காலை 8:30 மணிக்கு தமிழகத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் இன்றுடன் தனது பணிகளை முடித்துக் கொள்ளும் ஆளுநர்பன்வாரிலால் புரோகித்நாளை புறப்பட்டு செல்கிறார்.

ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு..!