சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தற்போது சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில், மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, விருதுகளை வழங்க உள்ளார்.