தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 12ம் தேதி தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரானது இன்று பிப்ரவரி 22ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது. கடந்த பிப்ரவரி 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் மற்றும் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீதான விவாதம் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது. இன்று கடைசி நாள் பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அறிஞர் […]
சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள கலைஞரின் நினைவிடத்தில், மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 16 அடி உயர கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். தற்போது சென்னை மெரினா கடற்கரையில் மலர்களால் […]
கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடத்தை பராமரித்து வந்த ரசூல் மைதீன் திருமண விழாவில் கலந்து கொண்ட கனிமொழி எம்.பி. கலைஞர் கருணாநிதி அவர்களின் நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தை, திரு. ரசூல் மைதீன் என்பவர் பராமரித்து வந்தார். இன்று அவருக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமண விழாவில், கனிமொழி எம்.பி அவர்கள் கலந்து கொண்டுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ‘தலைவர் கலைஞர் நினைவிடத்தை பராமரிக்கும் திரு. […]
கலைஞர் நினைவிடம் டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் ரூ.35 கோடியில் அமைய உள்ள கலைஞர் நினைவிடம் டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. வரும் டிசம்பர் 28-ம் தேதி வரை டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் நினைவிடம் அமையுள்ளது. மேலும், கருணாநிதியின் பணிகள், சிந்தனைகள், சாதனைகள் விளக்கும் வகையில் நவீன படங்களும் இடம்பெறுகின்றன.
சென்னை:மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன் கீழ்,தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றும் விதமாக சென்னை, காமராஜர் சாலை, அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில்,திட்டப்பணிகளை தயாரானதாலும்,நினைவிடப்பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் பொதுப்பணித்துறையினர் […]