இன்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

இன்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இன்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரித்ததால் கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி காலை 4 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், வருகின்ற 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பதா..? அல்லது சில தளர்வுகள் கொடுப்பதா..? என்பது குறித்து இன்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார்.

மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்துவதற்கு முன் கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டு அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னர், மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடஉள்ளர்.

இரு கூட்டத்தின் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் அரசு முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது.

இன்று மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!