புதிதாக இணை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல் முருகனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய இணை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல் முருகனுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் உங்களது பணி அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node