#Breaking:மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை...!

Chief Minister MK Stalin will hold a video conference with all district collectors tomorrow

தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,நாளை  காலை 11 மணியளவில்,காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 வரை ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக 38 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

அதன்படி,நாளை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில்,மாவட்ட வளர்ச்சிப்பணிகள்,கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது குறித்து,மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்வார் எனவும்,

வருகின்ற ஜூன் 21 வரை ஆம் தேதிக்கு பிறகு பொதுப் போக்குவரத்து இயக்கம் மற்றும் கூடுதல் தளர்வுகள் குறித்து முக்கியமான அறிவிப்பு இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.