PTR: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்தே மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடியை, அரசு சார்பில் சந்தித்து வரவேற்றதாக தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின் போது மதுரை மாவட்டத்திற்கு வந்த அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சென்று வரவேற்றார். இது குறித்து சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தப் […]
MK Stalin: பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம் முழுவதும் நாளை தொடங்குகிறது. மாநிலம் முழுவதிலும் உள்ள 3,302 மையங்களில் 7.25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்கி மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது. Read More – தூத்துக்குடி மக்களின் போராட்டத்தின் வெற்றி: ஸ்டெர்லைட் தீர்ப்பு குறித்து கனிமொழி […]
மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் பரப்புரையைத் திமுக தொடங்கியிருப்பதாக அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, அறிக்கை தயாரிக்க, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு என தனித்தனி குழுக்களை அமைத்து பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திமுக, தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “மக்களவைத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டின் […]
முதல்வர் வருகையை முன்னிட்டு இன்று திருச்சியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களால் திருச்சியில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். மேலும், தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக முப்பெரும் விழா விருதுநகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கினார். அப்பொழுது பேசிய மு.க.ஸ்டாலின், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடன் ஒப்பிட்டால் பெரும்பாலான வளர்ச்சி குறியீடுகளில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிட்டால் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு உள்ளது. உலக சுகாதார அமைப்பானது 1000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால் […]
‘மானவர் மனசு’ திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க, 800 மருத்துவர்களை நியமிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இத்திட்டம் விரைவில் முதலமைச்சரால் துவக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். “மாநிலம் முழுவதும் உள்ள 413 கல்வித் தொகுதிகளில் தலா இருவர் வீதம் 800 டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். படிப்பு, தொழில் மற்றும் நடத்தை மாற்றங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும்,” அமைச்சர் கூறினார். இளமைப் […]
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு தமிழக தலைநகரமான சென்னைக்கு வந்துள்ளார். சிறப்பு விமானம் மூலமாக குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளார். இவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றுள்ளனர். மேலும், குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு நான்கு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இவர் ஐ.ஐ.டி யில் நடைபெறவிருக்கும் விழாவில் நாளை கலந்துகொள்ள இருக்கிறார். மேலும், நாளை மறுநாள் மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள புத்தக […]
கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிக்கையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெறும். தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்கள் உரையாற்றினார். பேரவை தலைவர் மு.அப்பாவு அவர்கள், ஆளுநர் உரையின் மொழிபெயர்ப்பை வாசித்தார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22,23-ம் தேதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இன்று ஆளுநர் உரைக்கு […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாக்குறுதிப்படி பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழக 16 வது சட்டப்பேரவையின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது.முதல் நாளன்று ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்கி பல்வேறு திட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில்,விவாதத்தின் போது பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,”மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் ஒரு […]
2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். கொரோனா இரண்டாவது அலை பரவலானது தொடர்ந்து நீடிப்பதால் தமிழகத்தில் பள்ளிகள் தற்போது திறக்கப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.மேலும்,கல்வி தொலைக்காட்சி மற்றும் இதர மாற்று வசதிகள் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்றும் கூறினார். அந்த வகையில்,2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான புதிய காணொலிகள் கல்வித் தொலைக்காட்சியில் விரைவில் […]
தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,நாளை காலை 11 மணியளவில்,காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 வரை ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக 38 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி,நாளை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில்,மாவட்ட வளர்ச்சிப்பணிகள்,கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது […]
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன். திமுகவில் இணையவுள்ளதாகவும்,அதற்காக இன்று அண்ணா அறிவாலயம் வரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக,அதிமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மையம் கட்சியும் போட்டியிட்டது.ஆனால்,மக்கள் நீதி மய்யம் கட்சியானது அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.மேலும், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து,மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், குமரவேல், மவுரியா,சந்தோஷ்பாபு, பத்மபிரியா உள்ளிட்ட பல […]
கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.எனினும்,ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சம் கொண்டனர்.ஆனால்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் […]
நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். கலைஞரின் கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்றுசக்கர சைக்கிள், ஏழை எளிய […]
முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு, ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா […]
மனித நேயத்தின் மறுபதிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு செயல்பட்டிருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டியுள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளமான குழந்தைகள் அதரவின்றி உள்ளனர். இதன்காரணமாக,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும், பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு […]
கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ஏராளமான குழந்தைகள் அதரவின்றி உள்ளனர். இதன்காரணமாக,கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கியில் 5 லட்சம் வைப்புத் தொகை செலுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும், பெற்றோர்களை இழந்த […]
கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 50 கார் ஆம்புலன்ஸ்களை கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,சென்னையை விட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதன்காரணமாக,கொரோனா பரவல் அதிகமாக உள்ள கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்களுடன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் 6 மாவட்டங்களுக்கு இன்று,நேரடியாக […]
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் டெல்லியில் தொடங்கி 6 மாதங்களாகியும் அதனை மத்திய அரசு கண்டு கொள்ளாதது கவலையளிக்கிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை பிரதமர் மோடி நிறைவேற்ற வேண்டும்.மேலும்,இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை . இதுகுறித்து ,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020″, […]