இன்று குடியரசு தலைவரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Today, the Chief Minister will meet the President of the Republic of Tamil Nadu, MK Stalin, Ram Nath Kovind and speak.

இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்வர் பேசவுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக முதல்வர் டெல்லி செல்கிறார். மேலும், முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முதல்வர் பேசவுள்ளார். அதன்படி, இன்று  12:15 மணிக்கு குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.

மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு தினமான ஆகஸ்ட் 7 அன்று சட்டப்பேரவையில் அவரது முழு உருவப்படத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை நேரில் அழைப்பு விடுக்க மு.க.ஸ்டாலின் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் எம்.பி.க்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் சென்றுள்ளனர்.

இன்று குடியரசு தலைவரை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!