#Breaking:கொரோனா தடுப்பூசி உற்பத்தி – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை...!

Chief Minister MK Stalin has consulted with Bharat Biotech on the vaccine production of Covaxin

கொரோனா தடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.எனினும்,ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சம் கொண்டனர்.ஆனால்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதன்காரணமாக,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.மேலும்,மத்திய அரசிடம் இருந்து போதுமான தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வந்து சேரவில்லை.

இதனால்,தடுப்பூசி உற்பத்தியை தமிழகத்திலேயே தயாரிப்பது குறித்து முதல்வர் அலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில்,கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகள், பாரத் பயோடெக் நிறுவன மேலான் இயக்குனர் சுசித்ரா இலா,செயல் இயக்குனர் சாய் பிரசாத் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.