தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Sushil Chandra, the newly appointed 24th Chief Electoral Officer of the Election Commission of India, has been confirmed to be infected with corona.

இந்திய தேர்தல் ஆணையத்தின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக புதிதாக பொறுப்பேற்ற சுசில் சந்திராக்கு கொரோனா தொற்று உறுதி.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய தேர்தல் ஆணையத்தின் 24வது புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்றார்.

இந்த நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அவர்கள் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 13ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற சுஷில் சந்திரா, அப்போது கொரோனா நேர்மறையாக இருந்ததால் வீட்டிலிருந்து புதிய பதவியை ஏற்றுக்கொண்டதாக அதிகாரி தரப்பில் கூறப்பட்ட நிலையில், தற்போது சுஷில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதால், வீட்டிலிருந்து பணிபுரிகிறார்கள் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.