#BREAKING: தலைமை அலுவலகத்தில் முதல்வர்,  துணை முதல்வர் ஆலோசனை..!

The Chief Minister and the Deputy Chief Minister are consulting at the AIADMK headquarters.

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர்,  துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொகுதி பங்கீடு குறித்து தேதிமுக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ள நிலையில்,  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர்,  துணை முதல்வர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக, தேமுதிக உடன் இழுபறி உள்ள நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 3 மணி நேரம் முதல்வர்,  துணை முதல்வர் ஆலோசனை நடத்தினர். நேற்று முன்தினம் பாமக உடன் தொகுதிகளிலும் முடிந்த நிலையில் இன்று பாஜக மற்றும் தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், பாஜக சார்பில் 30 தொகுதிகள் கேட்கபட்டதாகவும், ஆனால் அதிமுக சார்பில் 20 தொகுதிகள் வரை கொடுக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் அதிக வாக்கு வங்கிகள் கொண்ட பாமகவிற்கே 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், குறைந்த வாக்கு வங்கிகள் கொண்ட பாஜகவிற்கு பாமகவை விட குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.