சென்னை : திரு.வி.க. நகர் பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர்...!

Chennai Kolathur, Thiruvananthapuram The Chief Minister has inspected the effects of rains and floods in urban areas.

சென்னை கொளத்தூர், திரு.வி.க. நகர் பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்துள்ளார்.

பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முதல்வர் நிவாரணம் வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள திரு வி க நகர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். அப்போது அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுடன் முதல்வர் புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார்.

சென்னை : திரு.வி.க. நகர் பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர்...!