தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2024-2025ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து, இன்று தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் படஜெட் உரையை வாசித்து வருகிறார். இந்த வேளாண் பட்ஜெட் குறித்த தகவல்களை கீழே காணலாம். தமிழக வேளாண் பட்ஜெட் பயிர் காப்பீடு குறித்த முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் 2 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேரைவையில் அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2022-23ம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை, வடகிழக்கு பருவமழை காலத்தில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை உள்ளிட்ட இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.380.40 கோடி […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், ஆலையில் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் […]
அதீத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் தென்மாவட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருவது போல பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும், இன்னும் பல்வேறு இடங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. அதனை அறிந்து அவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள […]
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததால், இரு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. அந்த வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 21ஆம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் பல்வேறு […]
சென்னை எண்ணூர் கடல் மற்றும் கொசஸ்தலை ஆற்றில் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து கழிவு எண்ணெய் கசிந்து ஆற்றில் கசிந்தது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் காட்டுக்குப்பம், சிவன் படை குப்பம், எண்ணுர் குப்பம், முகத்துவாரகுப்பம், தாழாங்குப்பம் கிராமங்களில் மீன்பிடி படகுகள் சேதம் அடைந்தன. இப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். […]
தற்போது, மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த அதீத கனமழையால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழைநீர் புகுந்து, புறநகர் முழுக்க வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள நேரில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அரசு மட்டுமல்லாது, பிரபலங்கள், தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளச்சேரி பகுதி மக்களுக்காக நடிகை நயன்தாரா தரப்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால், அது கடைசியில் சர்ச்சையில் போய் முடியும் என அவர் எண்ணி […]
மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மக்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக நிவாரணம் விநியோகம். தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், இந்த பருவமழையால் மயிலாடுதுறை மாவட்டம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 ரூபாய் நிவாரண தொகை அளிப்பதாக அறிவித்து இருந்த நிலையில், நேற்று, மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட 2 வட்டங்களான சீர்காழியில் 99,518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் […]
விவசாயிகளுக்கு மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்து நடவடிக்கை வேண்டும் என மநீம வலியுறுத்தல். விவசாயிகள் வரலாறு காணாத மழையால் பரிதவித்து வரும் நிலையில், சேதங்களை கணக்கெடுத்து நிவாரணம் வழங்க விரைந்த நடவடிக்கை வேண்டும் என்று மநீம வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் முறிந்து விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். பேரிடர் […]
இந்திய கடற்படையால் சுடப்பட்டு காயமடைந்த மீனவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவு நேற்று நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக […]
சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவிப்பு. சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து கத்திப்பாராவில் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி தூண் மீது மோதி ஆறு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சண்முகசுந்தரம் என்கிற இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சண்முகசுந்தரம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணமும் […]
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் – அரக்கோணம் சாலை, SR கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த […]
முதல்வர் மு.க.ஸ்டாலின் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் வரை தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரிவாக்கப் பணிக்காக சாலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி இன்று காலை தொடங்கியது. அப்போது பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் பொழுது ஜேசிபி இயந்திரத்தின் உதவியைக் கொண்டு மரத்தினை அகற்றினர். அந்த மரம் சரியாக அகற்றப்படாமல் […]
சென்னை:அம்மா உணவகம் மூடப்படாது என்றும்,பயிர் பாதிப்பிற்கு ரூ.132 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உறுதி அளித்துள்ளார். தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் 3 வது மற்றும் கடைசி நாள் கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது.அதன்படி,இன்று காலை தொடங்கிய பேரவை கூட்டத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். ஆனால்,சட்டப்பேரவையில் கூட்டுறவு […]
சென்னை:விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி,செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்தில் […]
நெல்லையில் தனியார் பள்ளி கழிவறை இடிந்து விழுந்த சம்பவத்தில், உயிரிழந்த 3 மாணவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்க முதல்வர் உத்தரவு. நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், […]
சென்னை கொளத்தூர், திரு.வி.க. நகர் பகுதிகளில் மழை, வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஆய்வு செய்துள்ளார். பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து […]
ஆந்திரா:வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை இலவசமாக வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த இரண்டு வாரமாக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சித்தூர், கடப்பா, நெல்லூர் மற்றும் அனந்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் அதிக கனமழையால்,குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனையடுத்து,நெல்லூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டர் மூலம் […]
தமிழகம்:கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,சென்னையில் பெய்த மழையால் எங்கு திரும்பினாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து,வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.இதன்காரணமாக,மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து,மழை நீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில்,மழை,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் […]
உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக, இந்திய அரசு ‘பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்’ (PM CARES Fund) என்ற பெயரில் ஒரு பொதுத் தொண்டு அறக்கட்டளையை அமைத்துள்ளது. இந்த அறக்கட்டளை மூலம் பொதுமக்கள் தங்களால் இயன்ற […]