#Breaking:மழை பாதிப்பு – மத்தியக் குழு தமிழகம் வருகை!

Central team visits Tamil Nadu to inspect damage caused by rains

தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய  மத்தியக் குழுவினர் தமிழகம் வருகை.

வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவதற்கு மத்திய அரசின் உதவி கோரப்பட்டது.

இந்நிலையில்,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர்ராஜீவ்சர்மாதலைமையிலான குழுவினர் சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.இக்குழுவில் விவசாயம்,நிதி,நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்யவுள்ளனர்.

அதன்படி,நாளை சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கன்னியாக்குமரி மாவட்டத்திலும்,இதனைத் தொடர்ந்து,நவ.23 ஆம் தேதியன்று கடலூர், தஞ்சை, வேலூர், ராணிப்பேட்டையிலும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.அதன்பின்னர்,இக்குழுவினர் நவம்பர் 24 ஆம் தேதியன்று முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து மழை பாதிப்பு தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.