மதியம் 1 மணி வரை இந்த 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

tn rain update

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழகத்தின் தென்மாவட்டங்களான  கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 9) மதியம் 1 மணி வரை 21 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, … Read more

தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! – நெல்லை ஆட்சியர்

thamirabarani

தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை முதல், மிக கனமழை பெய்து வருகிறது. மேலும், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், கனமழை அறிவிப்பை தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, நெல்லை மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள … Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

rain

தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணாமாக தமிழகத்தில் இன்று (31.12.2023) திருநெல்வேலி மற்றும் … Read more

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்த 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

tn rain

இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணாமாக தமிழகத்தில் இன்று (30.12.2023) மற்றும் நாளை (31.12.2023) ஆகிய நாட்களில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று திருநெல்வேலியின் பல பகுதிகளில் 20 … Read more

அரபிக் கடலில் உருவாகிறதுகுறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை!

heavy rain

இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக வரும் ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக … Read more

ஒரு வாரத்திற்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை – வானிலை ஆய்வு மையம்.!

RAIN

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு … Read more

அவன் ஊர்ல வெள்ளம் வந்தா அவன் போக கூடாதா? மாரி செல்வராஜுக்கு குரல் கொடுத்த வடிவேலு.!

Vadivelu - Mari Selvaraj

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் சென்றதற்கு விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனத்திற்கு தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு இது தொடர்பாக அவர் பேசுகையில், “அது அவன் ஊரு. அந்த ஊரில் பள்ளம், மேடு எங்கே இருக்கு என்பது அவனுக்குத்தான் தெரியும்.  அவன் ஊரில் வெள்ளம் வந்தா அவன் போகாமல் வேறு … Read more

Weather: நடப்பு பருவத்தில் வடகிழக்கு பருவமழை 43% குறைவு – தென் மண்டல இயக்குநர்!

WeatherUpdate

நடப்பு பருவத்தில் வடகிழக்கு பருவமழை இதுவரை 43% குறைவாக பெய்துள்ளது என இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் பேட்டி அளித்துள்ளார். கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், 123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது. … Read more

Rain Alert: புயல் எதிரொலி…7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

RainUpdate

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் புயல் உருவாகி உள்ளதால் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் நேற்று … Read more

உருவாகிறது அடுத்த புயல்! 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

BiporjoyCyclone

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, அரபிக்கடலில் தேஜ் புயல் உருவாகியுள்ள நிலையில், வங்கக்கடலில் புதிய புயல் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று நள்ளிரவு மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று,  … Read more