நெல்லை:சாஃப்டர் பள்ளிக்கு தீயணைப்புத்துறை சார்பில் கடந்த ஜனவரி 29 ஆம் தேதியன்று தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்றும், அதில்,தீயணைப்புத்துறை சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்ததில்,3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, நெல்லை சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் […]
தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பினால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் தமிழகம் வருகை. வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிடுவதற்கு மத்திய அரசின் உதவி கோரப்பட்டது. இந்நிலையில்,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னைக்கு வருகை புரிந்துள்ளனர்.இக்குழுவில் விவசாயம்,நிதி,நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து […]