ரஷ்ய , உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் ..!

டெல்லியில் உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

டெல்லியில் உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.

உக்ரைனில் 6-வது நாளாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை நடந்த குண்டு வீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் நவீன்  உயிரிழந்தார். உயிரிழந்த மாணவர் கர்நாடகாவை சார்ந்தவர் கார்கிவ் நகரிலிருந்து வெளியேற ரயில் நிலையத்திற்கு செல்லும்போது குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் உக்ரைன், ரஷ்ய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.