#BigBreaking:முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதிவு

Case registered against former minister SB Velumani

எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சோதனையானது  எஸ்.பி.வேலுமணி  வீடு உட்பட 52 இடங்களில் நடைபெற்று வருகிறது.அமைச்சராக இருந்தபோது  அரசு ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள் ,நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில்  ஈடுபட்டதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின் அடிப்படையில்  எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.