கோவை: மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்து உள்ளது குறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக, பாஜக கூட்டணி தொடர்ந்து இருந்தால் எப்படியும் 30 தொகுதிகள் வென்று இருப்போம் எனவும், அண்ணாமலை தான் அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி இருந்தார். இதனை அடுத்து, கோவை விமான நிலையத்தில் சேத்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, 2019 தேர்தல் சமயத்தில் அதிமுக ஆளும் கட்சியாக இருந்தது. அப்போது அதிமுக […]
சென்னை: அதிமுகவிற்குள் பிளவு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார். அதிமுகவிற்குள் பிளவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், குறிப்பிட்ட பத்திரிகை தினமும் எங்களை விமர்சிக்கும் வகையில் செய்திகளை பதிவிடுகிறது. அதிமுகவில் , புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு பிறகு நாங்கள் […]
Election2024 : கோவையில் போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் செய்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலதிற்குள் காலஅவகாசம் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற தொகுதியான கோவையில் இந்த முறை திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படாமல் திமுகவே நேரடியாக களமிறங்கியதற்கு காரணம் என்னவென்று பலரும் யோசிக்கவே, தாடாலடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை […]
எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவை தர்காவில் அதிமுகவினர் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். முன்னாள் முதல்வர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணியில் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைய வேண்டும் என கோவையில் ஒரு தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த சிறப்பு பிரார்த்தனையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட முக்கிய அதிமுக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த சிறப்பு பிரார்த்தனையில் […]
டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து செய்யப்பட்டலும், புதிய வழக்கு பதிய வாய்ப்பு இருக்கிறது. ஆதலால், குற்றச்சாட்டுகளில் இருந்து முழுதாக எஸ்.பி.வேலுமணியை விடுவித்து விட முடியாது. – சென்னை உயர்நீதிமன்ற அமர்வு கருத்து. கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு அரசு சார்பில் டெண்டர் கோரப்படத்தில், முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்பி.வேலுமணி தரப்பில் வழக்கு தொடர்பாட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை விசாரித்த […]
முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை, எம்.பி மற்றும் எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் விடுகையில், அப்போது தமிழக அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி , தனக்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கி முறைகேட்டில் ஈடுப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறையிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் 2018இல் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. சென்னை […]
வரும் தேர்தல் 40க்கு 40ம் ஜெயிப்போம். அதே போல வரும் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கும் அதிகமாக ஜெயிப்போம் என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார். கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக அரசின் திட்டங்களை விமர்சித்து பேசியிருந்தார். மேலும், ‘ காவல்துறையினர் அடிமை போல இருக்காதீங்க. மிஞ்சி போனால் டிரான்ஸ்பர் செய்வாங்க. எங்க ஆட்சியில் காவல்துறையினர் காவல்துறையினராகவே இருந்தார்கள். இந்த சூழ்நிலை மாறும். எப்போது […]
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதான ரெய்டு நடவடிக்கை பற்றி ஓபிஎஸிடம் கேட்கப்பட்டபோது, ‘ அரசு அவர்கள் கடமையை செய்கின்றனர். குற்றமட்டவர்கள் என்று அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும்.’ என தனது கருத்தை தெரிவித்தார். இன்று தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்திவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேள்விக்கு பதில் கூறினார். அப்போது, அதிமுக மூத்த நிர்வாகி பண்ருட்டி ராமசந்திரன் […]
கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்று விட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வந்தது. தற்போது சபாநாயகராக இருக்கும் அப்பாவு 2019, 2020-ஆம் ஆண்டுகளில் அளித்த புகாரின் அடைப்படையில் இந்த சோதனை நடைபெற்றது. எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டு […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வருமானத்தை விட 3,928% கூடுதலாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி,தான் பதவி வகித்த காலங்களில் முறைகேடாக நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கிய புகாரின் அடைப்படையில் அவருக்கு சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் வீடு, அவருக்கு நெருக்கமாக உள்ள நிறுவனங்கள் என மொத்தம் 60 இடங்களில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை […]
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு,லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சியில் முறைகேடாக டெண்டர்களை ஒதுக்கியதாக அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால்,முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய 60 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய நிலையில்,அவரது வங்கி கணக்கை தற்போது முடக்கியுள்ளனர். இதனையடுத்து,அவரது சொத்து ஆவணங்கள் தொடர்பாக தகவல் சேகரிக்கும் முயற்சியில் லஞ்ச […]
எஸ்.பி.வேலுமணி உட்பட அவரது பங்குதாரர்கள் 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சோதனையானது எஸ்.பி.வேலுமணி வீடு உட்பட 52 இடங்களில் நடைபெற்று வருகிறது.அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது. […]
அதிமுகவின் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அரசு ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தையும், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்மா வங்கியையும் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். கோவை அரசு மருத்துவமனையில் ரூ. 50லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை உடற்பாகங்கள் தயாரிப்பு நிலையத்தை அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் திறந்து வைத்தனர். இந்த தயாரிப்பு நிலையம் மூலம் விபத்தில் கைகளில், கால்கள் உள்ளிட்ட உடற்பாகங்களை இழந்தவர்களுக்கு செயற்கை உடற்பாகங்களை முதலமைச்சரின் காப்பீட்டு […]
இன்று காலை 9.30 மணிக்கு +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பொதுத்தேர்வில் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.04 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில், 97.49 % மாணவிகள், 94.38 % மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட 3.11 சதவீத மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் 97.90 % தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், விருதுநகர் மாவட்டம் 97.51 % தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்திலும், கரூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. […]
சென்னை, அக்.2- தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்கு தொடர உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோயம்புத்தூரில் மட்டும் பெறப்பட்ட 3000 பக்க ஆதாரங்களுடன் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வரவிருக்கும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி தி.மு.கழகத்தின் சார்பில் வாதாடவிருக்கிறார். தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது 10.9.2018 அன்று அவர் சார்ந்த துறையில், அவருடைய உறவினர்கள், நண்பர்கள் […]
தமிழ்நாடு மாநிலத்தில் ஊரக பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் முதலிடம் பிடித்ததுள்ளது. நாட்டிலேயே ஊரக பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில், முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டைThe Economic Times பத்திரிக்கை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இவ்விருதினை பெற்றுக்கொண்டார். இவ்விழாவில் இது குறித்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுத்திட்டம் […]
திமுக தலைவர் கூறியாதவது,அ.தி.மு.க அமைச்சரவையில் எஸ்.பி.வேலுமணி ஊழலின் மணியான “கதாநாயகனாக” இருந்து, அரசு கஜனாவை, தனது சொந்தங்களின் நிறுவனங்கள் மூலம், அப்படியே “ஹைஜாக்” செய்து, கொள்ளையடித்து வருவது பற்றிய புகாரை, இன்றைய தினம் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குநரிடம் அளித்துள்ளார். இந்த பகல் கொள்ளை பற்றிய பகீர் தகவல்களை, தனியார் ஆங்கில தொலைக்காட்சி வெளியிட்டதற்காக, தனியார் ஆங்கில நாளிதழின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கோமல் கவுதம் மற்றும் உதவி ஆசிரியர் […]
தமிழ் நாடு,வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக புது தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இதற்க்கு உள்ளாட்சி துறை அமைச்சர் கூறியதாவது,என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார்; நிரூபிக்க முடியாவிட்டால் பதவிகளை விட்டு ஒதுங்க ஸ்டாலின் தயாரா? – அமைச்சர் வேலுமணி பதில் கேள்வி.
தமிழ் நாடு,வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக புது தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: “உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சித் துறையாக” உருக்குலைத்திருப்பது, […]