#BUDGET2022:"நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள்;1-12 ஆம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி" – பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு

# BUDGET2022: Introduction of digital currency; 2 lakh Anganwadis will be upgraded -Union Finance Minister announces in the budget

ரிசர்வ் வங்கி மூலம் புதிய டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் எனவும்,நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்,2022-23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில்,பிளாக்செயின் மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் கரன்சி 2022-23 முதல் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.இது பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.மேலும்,

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இணைய வழி பாடத்திட்டம் ஊக்குவிக்கப்படும்.

அனைத்து மாநில மொழிகளிலும் மாணவர்கள் டிஜிட்டல் வழியில் கல்வி கற்க புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு அனிமேஷன், VFX, டிஜிட்டல் விளையாட்டுகள் தயாரிப்பு ஆகியவற்றில் திறனை மேம்படுத்த திட்டங்களை வடிவமைக்க சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்நாட்டின் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்;

கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.