#BREAKING: காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவா?

It has been reported that the DMK has offered to allocate 24 sums to the Congress party.

காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தரப்பில் ரந்திப் சுர்ஜிவாலா, உம்மன் சாண்டி ஆகியோர் ஏற்கனவே திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் வெறும் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#BREAKING: காங்கிரஸ் கட்சிக்கு 24 தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவா?